செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (11:50 IST)

வெற்றியை கைப்பற்றிய போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பொது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டனில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, லேபர் கட்சி, பிரெக்ஸிட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 650 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று இரவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 360 க்கும் மேற்பட்ட இடங்களில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராக உள்ளார்.