புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:15 IST)

பிரிட்டன் பிரதமருக்கு பெண் குழந்தை: 57வது வயதில் 6வது குழந்தை!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
கடந்து 2019ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது மனைவியின் மறைவிற்குப் பின்னர் தனக்கு அரசியல் செயற்பாட்டாளராக இருந்த கேரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
 
இந்த ஜோடிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மகன் பிறந்த நிலையில் தற்போது மகள் பிறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 57 வயதான ஒரு ஜான்சன் அவர்களுக்கு பிறக்கும் ஆறாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது