1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 8 அக்டோபர் 2021 (21:19 IST)

ஒரு வயசிலே இம்புட்டு திறமையா.... விளம்பரத்தில் நடித்து அசத்திய ஆல்யா மகள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
 
தனது மகளின் கியூட்டான வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அவர் தற்போது தனது மகளுடன் விளம்பரம் ஒன்றில் நடித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சஞ்சய் வெளியிட்டுள்ளார். அதில் கியூட்டாக டைரக்ட்டர் எதிர்பார்த்தது போன்றே நடித்து ஐலா குட்டி அசத்தியிருக்கிறார். இதோ அந்த வீடியோ....