1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:04 IST)

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை: முதல் பரிசு கொடுத்த புகைப்படம்!

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை: முதல் பரிசு கொடுத்த புகைப்படம்!
பிரபல தமிழ் நடிகர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு செடி ஒன்றை பரிசாக அளித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் 
 
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் சௌந்தரராஜா. இவர் பிகில், குருதிகளம் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு பிறந்த பெண்குழந்தை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சௌந்தரராஜா கூறியிருப்பதாவது:
 
இன்று இந்த பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு என் முதல் பரிசாக இந்த மரக்கன்று. 
உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி