நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்குமா??.. ஓர் அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் பொருளாதார நிலைமை மந்தமாகியுள்ள நிலையில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் சமீபத்தில் புள்ளி விவரங்கள் வெளியாகி நாடு முழுவதும் இது குறித்த விவாதங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் நாட்டின் வேலை வாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கிராமப்புரங்களில் 7.8 சதவீதம் வேலைவாய்ப்பினமை நிழவுவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகர்புறங்களில் 9.6 சதவீதமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
2017-18 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக இருந்தது எனவும், தற்போது இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
“தேவைகளில் குறைவு, முதலீடு வீழ்ச்சி, ஜி எஸ் டி வரி போன்றவற்றாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும், ஆதலால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இது குறித்து நிதி ஆயோக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறுகிறார்.
ஜி எஸ் டி வரி, கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இனி அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தராவ் கூறுகிறார்.
சமீபத்தில் வாகன துறையில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளது பெரும் விவாத்தை கிளப்பியுள்ள நிலையில், தற்போது வேலைவாய்ப்பின்மை குறித்து வெளியான புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.