புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (20:54 IST)

நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் தடையா ? பரபரப்பு தகவல்

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நயந்தாரா. இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்ச்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்துள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது அப்படத்தை பிரபலப்படுத்தும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவருகின்றன.  ஆனால் இப்படத்தின் விளம்பர நிகழ்சிகளில் கலந்து நயன்தாரா மறுப்பதாக தகவல்கள் வெளியானதாக தெரிகிறது.
 
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ராம்சரன்  இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ஒப்பந்தம் போடும் போதே ’இதன் விளம்பரத்தில் நடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு நயன்தாரா ஒப்புக்கொண்டதாக’  ராம் சரண் தெரிவித்துள்ளரர்.
இந்நிலையயில் நயன்தாராவை விளம்பர நிகழ்சிகளில் கலந்து கொள்ள, அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை எனவும், இதனால் படத்தயாரிபாளர் தெலுங்கு சினிமா சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் நடிகை நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தடைவிதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.