1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Bomb blast in Afghanistan kills 9

ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

blast
ஆப்கானிஸ்தானில்  கடந்த வாரம் ஒரு மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து, 33 ஷியா பக்தர்கள் உயிரிழந்த நிலையில், இன்றூம் குண்வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இன்று வடக்கு பகுதியில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல், ஷியா பிரிவினர் வசிக்கும்  பார்க மாகாண தலை  நகர் மசார் –இ- ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கும் பொறுப்பேற்கவில்லை எனினிலும்  தலிபான் படையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐஸ்கிரீம் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய குழந்தைகள் பலி!