1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 9 மே 2022 (16:30 IST)

ஏறிய வேகத்தில் இறக்கம்: 50% வீழ்ச்சி அடைந்தது பிட்காயின்!

Bitcoin
கடந்த சில மாதங்களாக பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சி மிக அதிகமாக சென்றது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சத்தில் இருந்தது என்பதையும் பார்த்தோம் இதனால் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கில் லாபம் அடைந்தனர் என்ற நிலையில் பிட்காயின் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது
 
 ஏறிய வேகத்தில் கிடுகிடு என இறங்கிய பிட்காயின் தற்போது 50 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல், உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக பிட்காயின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் உலகம் முழுவதும் பங்கு சந்தைகளும் சரிவை சந்தித்து வரும் நிலையில் பல நாடுகளும் முதலீடுகளை டாலர்களாக மாற்றி வருவதால் அவற்றின் மதிப்பு உயர்ந்து மற்ற நாடுகளின் பண மதிப்பு குறைந்து வருகிறது இந்த நிலையில் பிட்காயின் விலை சரிந்துள்ளதை அடுத்து அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்