1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 2 மார்ச் 2016 (18:09 IST)

மனைவியின் பல்லைப் பார்ந்து பயந்த பின்லேடன்..

மனைவியின் பல்லைப் பார்ந்து பயந்த பின்லேடன்..
உலகையே பயமுறுத்திய பாகிஸ்தான் தீவிரவாதி ஒசாமா பின்லேடன், தன் மனைவியின் பல்லைப் பார்த்து பயந்த விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை, 2011 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். அவனது சடலத்தை நடுக்கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. அவனைக் கொன்ற பின், அந்த வீட்டிலிருந்த கம்ப்யூட்டர் சி.டி மற்றும் சில முக்கிய கோப்புகளை அமெரிக்க ராணுவத்தினர் கைப்பற்றினர்.
 
அதிலிருந்த ரகசிய தகவல்களை அமெரிக்கா தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அதில் ஒபாமா எழுதியுள்ள ஒரு குறிப்பில், தன்னை அமெரிக்க அரசு மறைமுகமாக உளவு பார்த்து வருவதாக எழுதியுள்ளான்.
 
கடத்தப்பட்ட பிணையகைதிகளை விடுவிக்க பணம் கொண்டு வரும் சூட்கேஸ்களில் கூட ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என பின்லேடன் சந்தேகப்பட்டுள்ளான். அதேபோல் தன் மனைவியின் மூலமாக கூட அமெரிக்கா தன்னை உளவு பார்க்கலாம் என அவன் யோசித்துள்ளான்.
 
பின்லேடனின் மனைவிகளில் ஒருவர், ஒருமுறை ஈரானைச் சேர்ந்த ஒரு பிரபல மருத்துவரிடம் மாற்றுப்பல் பொருத்திக் கொண்டுள்ளார்.  அந்த பொய் பல்லில் கூட அமெரிக்கா ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தியிருப்பார்களோ என்று பின்லேடன் சந்தேகப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.