வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு!.. இன்று கடைசி நாள்!..
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த நவம்பர் 4ம் தேதி துவங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடைபெற்று டிசம்பர் 19ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியானது,
தமிழகத்தில் உள்ள 5.43 கோடி வாக்காளர்களில் 97.3 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், சரியான முகவரி இல்லாதவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பவர்கள் என எல்லோரும் அடக்கம்.
ஆனால் சிலருக்கு முகவரிகள் இருந்தும் சில பிரச்சனைகளால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை.
அதன்படி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க ஜனரி 18ம் தேதியான இன்றுதான் கடைசி நாள் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகளுக்கு இன்றுதான் கடைசி நாள்.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியான பின் 12.80 லட்சம் பேர் வாக்காளர் பட்டியல் தங்கள் பெயரை சேர்ப்பதற்காக விண்ணப்பத்திருக்கிறார்கள். அவர்களின் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்ரவரி 17ம் தேதி இறுதிப்போட்டியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருகிறது.