1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:46 IST)

கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருகிறது! – பில்கெட்ஸ் எச்சரிக்கை!

கொரோனாவை போல எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்று நிகழ உள்ளதாக மைக்ரோசாஃபட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவுவதற்கு முன்னரே வைரஸ் குறித்து பிலேட்ஸ் எச்சரித்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

இந்நிலையில் தற்போது பில்கேட்ஸ் மக்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் பருவ நிலை மாற்றம் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே பருவநிலை மாற்றம் பற்றி அறிஞர்கள் பலர் எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பில்கேட்ஸ் கொரோனாவை விட அதிகமான உயிரிழப்புகளை பருவநிலை மாற்றத்தால் எதிர்கொள்ள வேண்டி வரும். வல்லரசு நாடுகள் உட்பட அனைவரும் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தற்போதைய நிலையை விட மோசமான பொருளாதார நிலையையும் உலகம் சந்திக்க வேண்டி வரலாம் என கூறியுள்ளார்.