வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (20:34 IST)

கொரோனா உதவித் தொகையி;ல் லம்போகினி கார் வாங்கிய நபர் !

உலகில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18,03,695 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில் 2.66 லட்சம் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 40 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா காலத்தில் சிறுகுறு தொழிலாளர்களுக்கு கடனாக வழங்கப்பட்ட நிவாரண நிதியில் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் லீ பிரைஸ். இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துக் கடன் பெற்றுள்ளார்.

இந்தப் பணத்தை வாங்கி லம்போனிகி கார் மற்றும் சீட்டாட்டத்தில் சில லட்சங்களை அவர் இழந்துள்ளதக தகவல்கள் வெளியாகிறது.