1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Billgates - Melinda Divorce Confirmed

பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து இறுதி!!!

Billgates - Melinda
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஒருவரும் மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகிய இருவரின் விவாகரத்து முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் தனது மனைவியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.  எனவே இருவரின் விவாகரத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமண பந்தத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை மூலம் தொண்டுப் பணிகளில் இருவரும் இணைந்து செயலாற்ற முடிவு செய்ததாகவும் ஏற்கனவே இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்றும் அதற்காக தாங்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இனிமேலும் தம்பதிகளாக தங்களால் தொடர ம முடியாது என்று முடிவு செய்து பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj