வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (08:18 IST)

மைனாரிட்டி அரசாக மாறியதால் பிரதமர் திடீர் ராஜினாமா! பொதுமக்கள் அதிர்ச்சி

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக மாறியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, கூட்டணி கட்சியான பெல்மிஸ்ட் தேசிய கட்சி திடீரென வாபஸ் பெற்றது.
இதனால் பிரதமர் சார்லஸ் அவர்களின் அரசு மைனாரிட்டி அரசாக மாறியது. எனவே அவர் தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.


நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள விரும்பாத பிரதமர் மைக்கேல், மன்னர் பிலிப்பிடம் சற்றுமுன் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இருப்பினும் அவர் வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரை பதவியில் இருக்குமாறு மன்னர் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு பத்திரிகைகள் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமரின் இந்த திடீர் ராஜினாமாவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.