புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (22:15 IST)

மாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்த மோடி! கஜா புயலுக்கு?...

தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களை உலுக்கிய கஜா புயல் பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத பிரதமர் மோடி, மாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

 மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா அவர்கள் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர்  வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து, மாலத்தீவு அதிபர், முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே, 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தத்தை அடுத்து மாலத்தீவுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.