1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:54 IST)

இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: வங்கதேசம்

Bangladesh
வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி வங்கதேசத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேச அரசு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாத வன்முறை காரணமாக அதிபர் ஷேக் ஹசீனா திடீரென பதவி விலகிய நாட்டை விட்டு வெளியேறினார் என்பதும் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவை அங்கிருந்து நாடு கடத்தி வங்கதேசத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்கு தொடரப்படும் என வங்கதேச வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நாட்டுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran