ஒமைக்ரானை ஒழிக்க புதிய தடுப்பூசி..! – ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
கொரோனாவின் வீரியமடைந்த வேரியண்டான ஒமிக்ரானை தடுக்க புதிய தடுப்பூசியை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டிற்குள் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க பல நாடுகளும் தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்தியபோதும் கொரோனாவின் வீரியமடைந்த வேரியண்டான ஒமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்துவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள் ஒமிக்ரானை தடுக்கும் தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர். ஒமிக்ரான் மற்றும் அதனுடன் தொடர்புடைய சார்ஸ் கோவ் 2 வகைகளுக்கு எதிராக திறம்பட இந்த தடுப்பூசி செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விலங்குகளுக்கும்,மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நிதி கிடைத்தால் அடுத்தடுத்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.