1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (23:28 IST)

பாஜக துவக்க நாளில் வெடி வைத்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

karur
கரூர் மாவட்ட அளவில் விழாக்கோலம் பூண்டது பாஜக – பாஜக துவக்க நாளில் வெடி வைத்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் – பிரதமர் மோடி அவர்கள் நேரலையில் பேசியதை கவனித்து உறுதி மொழி எடுத்து கொண்ட பாஜக தொண்டர்கள்
 
இன்று பாஜகவின் 42-வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பாஜக தொண்டர்களிடம் காணொளி மூலமாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், ``பாஜக வலுவான நிலையில் உள்ளது. மாநிலங்களவையில் கடந்த 30 வருடங்களில் வேறெந்த கட்சியும் தொடாத உச்சத்தை பாஜக அடைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில், நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது" என்றும் பேசினார். முன்னதாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விழாகோலம் பூண்டது போல் வெடி வைத்து கொண்டாடப்பட்டது. மேலும், கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து அவ்வழியாக, சென்ற பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பின்னர், கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஆற்றிய காணொளியை அவரது யுடியூப் பக்கத்தில் நேரலையாக கண்டு, அதற்கு ஏற்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளரும், சிறப்பு அழைப்பாளருமான சிவசுப்பிரமணியன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்து கொண்டனர். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் கரூர் மாவட்டத்தினை பாஜக கோட்டையாக மாற்ற முழுமுயற்சி எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் கேட்டுக் கொண்டார்.