தைவான் மீது தாக்குதல் நடத்தினால்?அமெரிக்கா ராணுவத் தலைமைத் தளபதி முக்கிய தகவல்
சீனாவின் ஒரு பகுதியாகக இருந்த தைவான் கடந்த 1949 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டது என்றாலும், இன்னும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வருகிறது.
அதனால், இரு நாடுகளிடையே அவ்வப்போது மோதல் எழுந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க பெண் எம்பி ஒருவர் அங்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில்,தைவான் நாட்டில் அருகே சீனா தங்களின் 10 போர் விமானங்களை நிறுத்தி வைத்து அங்கிருந்து பறந்துவருகிறது. அதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து, அமெரிக்க நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் கில்லி, இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,ஒரு மலைப்பிரதேசமாக தைவான் உள்ளது, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்துவது என்பது ஒரு அரசியல் பிழையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை சீனா, தைவானை தாக்கும் பட்சத்தில், உக்ரைன் மீது, ரஷ்யா தாக்குதல் நடத்துவதைப் போல் தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj