சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – கலக்கத்தில் உலக நாடுகள்?
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளை பாதித்தது. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டு காலமாக உலக நாடுகள் கொரோனா வைரஸோடு போராடி வரும் நிலையில் சமீப காலமாக பல நாடுகளில் கொரோனா வெகுவாக குறைந்துள்ளதால் மக்கள் மாஸ்க்குகளை மறந்து நிம்மதியாக பொதுவெளிகளில் நடமாடி வருகின்றனர்.
சீனாவிலும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சில நாட்கள் முன்னதாக 11 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்புகள் தற்போது 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 14,878 பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இதில் 13,167 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Edit By Prasanth.K