வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (12:57 IST)

சூரிய குடும்பத்துக்கு குறுக்கே புகுந்த புதிய கோள்!? – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

சூரிய குடும்பத்தில் இதுநாள் வரை ஒன்பது கோள்கள் இருந்து வருவதாக நம்பப்பட்ட நிலையில் புதிதாக ஒருகோள் குறுக்கே புகுந்து விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுவரை உலகத்தில் உள்ள விஞ்ஞானிகள் எல்லாம் சூரியனை மொத்தம் ஒன்பது கோள்கள் சுற்றி வருவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருந்தார்கள். அதுவே மாணவர்களுக்கு பாடமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சூரியனின் கடைசி கோளான ப்ளூட்டோ ஒரு கோள்தானா என்பதில் விஞ்ஞானிகளுக்கு பலமான சந்தேகங்கள் இருந்து வருகின்றது.

அதற்கான ஆய்வுகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஜூபிடர் (வியாழன்) அருகே ஒரு புதிய கோளை கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அது ஒரு கோள்தானா என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது வியாழனை விட மூன்று மடங்கு பெரியதாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம் இவ்வளவு நாள் இவ்வளவு பெரிய கோள் எப்படி விஞ்ஞான ஆய்வாலர்கள் கண்களில் படாமல் இருந்தது என்பதுதான். அதன் சுற்று வட்ட பாதையை ஆராய்ந்தபோதுதான் அவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தன.

HR 5138 என பெயரிடப்பட்டிருக்கும் அந்த கோள் சூரியனை சுற்றி வரும் மற்ற கோள்களை போல் வட்டபாதையில் சுற்றி வரவில்லை. சூரியனை சுற்றி வரும் கோள்கள் மற்ற கோள்கள் மீது இடிக்காத படி சரியான தூரத்தில் வட்டம் அல்லது நீள்வட்ட பாதைகளை கொண்டுள்ளன. மேலும் அந்த வட்டத்தின் மையத்தில் தான் சூரியன் இருக்கிறது.

ஆனால் இந்த புதிய கோள் சூரியனை தனது வட்டப்பாதையின் மூலையில் வைத்து சூரிய குடும்பத்தின் மற்ற கோள்களின் வட்டப்பாதைகளுக்கு குறுக்கு வெட்டாக புகுந்து சூரியனை நெருங்கி சுற்றி வெளியேறுகிறது. சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சுற்றும்போது அந்த கோள் மெதுவாய் சுழல்வதாகவும், சூரிய குடும்பத்தில் நுழையும்போது மூன்று மடங்கு வேகமாய் சுழன்று வெளியேறுவதாகவும் அவர்கள் கணித்திருக்கிறார்கள். சூரியனின் ஈர்ப்பு விசையால் இந்த வேக அதிகரிப்பு நிகழலாம் என கூறப்படுகிறது.

தற்போது ஜூபிடருக்கு மிக அருகே பயணித்து கொண்டிருக்கும் அந்த கோள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் வானவியல் ஆராய்ச்சியாளர்கள். இப்படி குறுக்காக பல ஆண்டுகளாக சுழன்று கொண்டிருக்கும் இந்த கோள் இதுவரை எந்த கோள் மீதும் மோதாமல் பயணிப்பது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.