செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:50 IST)

அர்னால்ட் அளித்த 7.5 கோடி ரூபாய் – நிஜ ஹீரோக்களுக்காக !

கொரோனா நோய்க்கெதிராக போராடிவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்காக 7.5 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் அர்னால்ட்.

உலகம் முழுவதும் கொரோனா பீதியால் பல நாடுகளில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அங்கு இதுவரை 2.36 லட்சம் பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பலியானோரின் எண்ணிக்கையும் 5000 ஐ தாண்டியுள்ளது.

முதலில் சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான இழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் வரும் நாட்களில் இன்னும் மோசமான இழப்புகளை சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார். மேலும் அங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் விதமாக ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாநில ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் ஒரு மில்லியன் டாலர் (7.6 கோடி ரூபாய்) அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் நிஜ ஹிரோக்களுக்கான எளிய வழியில் என்னுடைய பங்களிப்பு எனக் கூறியுள்ளார்.