1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Another 159 indians rescued from Slovakia

ஆபரேஷன் கங்கா; ஸ்லோவேகியா வழியாக இந்தியர்கள் மீட்பு!

India
உக்ரைனில் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் கங்கா மூலமாக மேலும் 154 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனில் உள்ள பிற நாட்டு மக்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நாட்டு மக்களும் உக்ரைனுக்கு அருகே உள்ள நாடுகளுக்கு சென்று அங்கிருந்து விமானங்கள் மூலமாக சொந்த நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேசன் கங்கா திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அண்டை நாடுகளுக்கு தப்பி வரும் இந்தியர்கள் விமானம் மூலமாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனிலிருந்து தப்பித்து ஸ்லோவேகியா சென்ற 154 இந்தியர்கள் இன்று விமானம் மூலமாக பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நெருங்கும் தாழ்வு மண்டலம்! – தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு!