வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (13:16 IST)

கஞ்சா போதையில் கரினா: சகோதரனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து அட்டகாசம்!!!

பிரேசிலில் கஞ்சா போதையில் இருந்த சகோதரி தனது சகோதரனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்தவர் கரினா(18). இவருக்கு ஒரு சகோதரன் இருந்தார். இருவருக்கும் அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் கஞ்சா போதையில் இருந்த கரினா தனது சகோதரனிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது சகோதரனை கொலை செய்த கரினா, அவனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்துள்ளார்.
 
வீடு திரும்பிய கரினாவின் தாய், மகனின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீஸில் புகாரளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கரினாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.