திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (16:10 IST)

பிஞ்சு குழந்தைய நாசமாக்கிட்டியே டா பாவி!! கோவை கொடூரனை பொளந்துகட்டிய மக்கள்...

கோவையில் 7 வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த அயோக்கியனை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை அருகே ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில குற்றவாளியை பிடிக்க போலீஸார் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர்.
 
இறுதியில்  சந்தோஷ்குமார் என்ற அயோக்கியன் சிக்கினான். இந்த கேடுகெட்டவன் தான் அந்த பிஞ்சுக்குழந்தையை நாசமாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறினான்.
 
இதையடுத்து சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில் அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான்.
பரிசோதனை முடிந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த அவனை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து துவைத்தனர். பிஞ்சு குழந்தைய நாசமாக்கிட்டியே டா பாவி என சொல்லியவாறே அடித்தனர்.  உடனடியாக அவனை போலீஸார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.