வாடிக்கையாளரை குஷிபடுத்த பாலியல் தொழிலாளியை அனுப்பிய வங்கி அதிகாரி
மிகப்பெரும் பணக்கார வாடிக்கையாளரின் முதலீட்டை பெறுவதற்காக, அமெரிக்க வங்கியின் மூத்த அதிகாரி, ரஷ்ய நாட்டு பிரபல பாலியல் தொழிலாளியை அனுப்பி வைத்த விவகாரம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கோல்டுமேன் சேச் என்ற வங்கி செயல்படுகிறது. அதில் யூசுப் கப்பாஜ் என்பவர் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். லிபியா நாட்டின் முன்னாள் ஜானாதிபதி முகமது கடாபியின், தலைமை அதிகாரி ஒருவரை குஷிபடுத்தி, தன்னுடைய வங்கிக்கு ரூ.10 கோடி முதலீடு பெற நினைத்தார்.
எனவே அவரை குஷுப்படுத்துவதற்காக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான மெசிலா (25) என்ற பெண்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருக்கு 5,00,000 பவுண்ட் பணம் கொடுப்பதாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்பின் அவரை சொகுசு விமானத்தில் துபாய் அனுப்பி வைத்துள்ளார்.
துபாய் சென்ற மெசிலா அந்த வாடிக்கையாளரை குஷிபடுத்தியுள்ளார். அதன் மூலம் அந்த வங்கிக்கு சுமார் 846 மில்லியன் முதலீடு செய்யப்பட்டது. இது நடந்தது 2008ம் ஆண்டு. இந்த தகவல் தற்போது வெளியே கசிந்ததையடுத்து, முறைகேடாக பெறப்பட்ட முதலீட்டை திருப்பி அளிக்கவேண்டும் என்று தற்போதையை அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.