ஹிலாரி கிளிண்டனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து


Caston| Last Updated: சனி, 18 ஜூன் 2016 (09:20 IST)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


 
 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் முதல் பெண் வேட்பாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக ஜனநாயக தேர்தல் அரசியல் முறையில் உள்ள பெண்களுக்கு பெருமையும், திருப்தியும் அளிப்பதாக உள்ளது என ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஹிலாரி தன்னை சென்னையில் சந்தித்ததை இந்த கடிதத்தில் நினைவு கூர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஹிலாரி கிளிண்டன் அடுத்தக்கட்டமாக செய்யவிருக்கும் பிரச்சாரத்திற்கும், வாக்குப்பதிவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :