1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (08:15 IST)

அவன் என்னை பாலியல் உறவுக்கு அழைத்தான்: ஓமர் மதின் ஒரு ஓரின சேர்க்கையாளர்

அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் ஓரின சேர்க்கையாளர் விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரை கொன்ற ஓமர் மதின் தீவிரவாதி இல்லை எனவும், அவன் ஒரு ஓரின சேர்க்கையாளன் எனவும் தகவல்கள் வருகின்றன.


 
 
இஸ்லாம் ஓரின சேர்க்கைக்கு எதிரான மதம். அதனால் தான் மதின் ஓரின சேர்க்கையாளர்களை படுகொலை செய்ததாகவும், அவன் தீவிரவாதி எனவும் கூறப்பட்டது. ஆனால், ஓமர் மதின் ஒரின சேர்க்கைக்காக ஒருவரை அணுகியதாக மதினுடன் 2006-ஆம் ஆண்டு போலீஸ் அகாடமியில் பயின்ற ஒருவர் கூறியுள்ளார்.
 
மதின் ஓரின சேர்க்கை செயலி மூலம் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. க்ரிண்ட்ர் (Grindr) என்னும் செயலி மூலம் மதின் தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக கெவின் வெஸ்ட் என்பவர் கூறியுள்ளார். மேலும் கார்ட் செடனனோ கூறும்போது மதின் அந்த செயலி மூலம் தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், மதினை பற்றி தெரியாததால் அவனை பிளாக் செய்தேன் எனவும் கூறியுள்ளார்.
 
ஓமர் மதின் ஓரின சேர்க்கையாளர் தான் என அவரது முதல் மனைவியான சித்தோரா யூசுபியாவும் கூறியுள்ளார். இந்நிலையில் மதின் துப்பாக்கிச்சூடு நடத்திய அதே விடுதிக்கு பலமுறை சென்றுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.