1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (10:05 IST)

நாகார்ஜுனா குடும்பத்தினரை அவமதித்தா பாலகிருஷ்ணா.. நாக சைதன்யா விமர்சனம்!

பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா “அக்கினேனி தொக்கினேனி” எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அக்கினேனி குடும்பத்தினரின் வாரிசான நாக சைதன்யா ”தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்கள் தூண்களாகவும், நம் சினிமாவுக்கு பெருமையாகவும் அமைந்தவர்கள். அவர்களை நாம் மரியாதைக் குறைவாக பேசுவது நம்மையே நாம் தரம்தாழ்த்திக் கொள்வது போன்றது” எனக் கூறியுள்ளார்.