1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. america spent 43 billion dollars on iran war

ஈரானுடன் போர்!. அமெரிக்காவின் மொத்த செலவு இவ்ளோ கோடியா?!..

iran america
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா போரை துவங்கியது. அமெரிக்காவோடு சேர்ந்து இஸ்ரேலும் ஈரானை தாக்கியது. இதில் ஆத்திரமடைந்த ஈரான் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது.,

மேலும், இந்தியாவிலுள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடியது. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக மாறியது. அதன்பின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ஹார்மூஸ் நீரிணை பக்கம் வரும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா மீண்டும் ஈரானை தாக்க துவங்கியது..

தற்போது வரை போர் முடிவுக்கு வராத நிலையில் போருக்கான அமெரிக்காவின் மொத்த செலவு 43.6 பில்லியன் டாலராக (4.18 லட்சம் கோடி) அதிகரித்திருக்கிறது. இதில் ஆயுதங்களுக்கான செலவு மட்டும் 28.1 பில்லியன் டாலர்கள் (2.69 லட்சம் கோடி) எனவும், தற்போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பில்லியன் டாலர்கள் (28,780 கோடி) செலவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா!.. பழனிச்சாமி தகவல்..