திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:18 IST)

சீனா-தைவான் பதற்றம் எதிரொலி: ஏவுகணை சோதனையை ஒத்திவைத்த அமெரிக்கா!

america
சீனா-தைவான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள காரணத்தினால் அமெரிக்கா தனது ஏவுகணை சோதனையை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பயணம் செய்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமின்றி தைவானை சுற்றி தனது படைகளை நிறுத்தி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் அமெரிக்கா நேற்று ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சோதனையை சீனா தைவான் போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் விரைவில் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் இந்த சோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்