புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (12:02 IST)

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? கவுதம் மேனன் தகவல்!

vendhu
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு பாகமாக உருவாக்க கௌதம் மேனன் திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போது முதல் பாகம் மட்டுமே ரிலீசாகிறது என்றும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார் 
 
ஒரு காமன் மேன் எப்படி கொள்ளைக்கூட்டத் தலைவன் ஆக மாறினார் என்பது முதல் பாகத்திலும், கொள்ளைக்கூட்டத் தலைவன் ஆக மாறிய பின்னர் அவருடைய நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது என்பதும் இரண்டாம் பாகத்தில் உள்ள கதையாக இருக்கிறது என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்
 
இரண்டாம் பாகத்தில் சிம்புவின் கெட்டப் வேற லெவல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன