1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:38 IST)

வெந்து தணிந்தது காடு.. பிரம்மாண்டமா செட்ட போடு! – ரூ.3 கோடி செலவில் ஆடியோ லான்ச்!

VTK
நடிகர் சிம்பு நடித்து வெளியாக தயாராக உள்ள “வெந்து தணிந்தது காடு” படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் அமையும் மூன்றாவது படம் இது.

இந்த படத்தின் மறக்குமா நெஞ்சம் உள்ளிட்ட 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற உள்ள இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக ரூ.3 கோடி செலவில் 6000 இருக்கைகளுடன் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. கோலிவுட் சினிமாவிலேயே மிக பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.