வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:25 IST)

''மாவீரா ''படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுக்கும் இயக்குனர் !

Shooting
தமிழில் மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாக இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வெளியான தொடர் சந்தனக்காடு. மறைந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு,. இயக்குனர் கவுதமன் இயக்கிய இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன்  நடிப்பில் வெளியான கனவே கலையாதே என்ற படத்தை இயக்கி,  சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

அதன்பின், இவர் இயக்கி, நடிகராக நடித்த படம் மகிழ்ச்சி. அதன் பின், தமிழ் பேரராசு கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளதால்  அரசியலில் தீவிர ஈடுபட்டு காட்டி வந்தார்.
Gowthaman

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். ''மாவீரா'' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.