வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (08:31 IST)

சின்ன வயதிலிருந்தே ஆசை; விண்வெளிக்கு டூர் போகும் அமேசான் நிறுவனர்!

அமேசான் குழுமத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் அடுத்த மாதத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விண்வெளியிலிருந்து உலகை பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருந்தாலும் விண்வெளி பயணம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக வீரர்களை அனுப்பவே உலக நாடுகள் அதிகளவில் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் விண்வெளி பயண அனுபவத்தை சாதாரண மக்களுக்கும் வழங்க ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்த மாதம் ஜூலை 20ம் தேதி அமேசார் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே விண்வெளிக்கு செல்வது தனது கனவு என தெரிவித்துள்ள அவர் தனது சகோதரரும் தன்னுடன் பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.