செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (10:41 IST)

ஃபேமிலிமேன் தொடரை தடை செய்யுங்கள்.. இல்லைனா..? – அமேசானுக்கு சீமான் கடிதம்!

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஃபேமிலிமேன் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை தடை செய்ய கோரி அமேசானுக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான ஃபேமிலிமேன் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அமேசான் ப்ரைமில் ஃபேமிலி மேன் தொடர் வெளியாகி பலரின் அதிருப்திகளை சந்தித்துள்ளது. சிலர் தமிழகத்தையும், தமிழர்களையுமே வன்முறை நிறைந்தவர்களாக ஃபேமிலிமேன் சித்தரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் இந்தியா தலைமை நிர்வாகி அபர்ணா புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஃபேமிலிமேன் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் தமிழர்கள் அமேசான் ப்ரைமை புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.