1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 ஜூன் 2021 (13:01 IST)

#BoycottAmazon: ஃபேமிலி மேன் சீரிஸால் ஏற்பட்ட சிக்கல்

FamilyMan2_against_Tamils மற்றும்  #BoycottAmazon போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான ஃபேமிலிமேன் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.
 
ஆனால், இதில் ஈழ விடுதலை போராட்டம் தவறான முறையில் காட்டப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரஒ உடனடியாக நிறுத்த வேண்டும் என பல தரப்பினர் கொந்தளித்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக #FamilyMan2_against_Tamils மற்றும்  #BoycottAmazon போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.