ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (13:24 IST)

'இரவின் நிழல்’ அமேசானில் ரிலீஸ் ஆனதா? இல்லையா? பார்த்திபன் வருத்தம்!

Parthiban
பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படம் நேற்று முன்தினம் அமேசான் ஓடிடியில் ரிலீஸானதாக கூறப்பட்டாலும் அமேசான் வாடிக்கையாளர்கள் இந்த படம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் 
 
சியர்ச் ஆப்சனில் தேடினாலும் கூட அந்த படம் எங்கே இருக்கிறது என்று வரவில்லை என்று பலர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து பார்த்திபன் தனது கவலை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் இரவின் நிழல் திரைப்படம் அறிவிப்பு இல்லாமல் புரமோஷன் இல்லாமல் வெளியாகி உள்ளது என்றும் அது மிகுந்த வருத்தத்தை தெரிவித்து ள்ளது என்றும் கூறினார்
 
மேலும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த படம் தெரியவில்லை என்றும் இந்தியாவில் கூட பலருக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர் என்றும் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே இரவில் நிழல் திரைப்பட உலகின் முதல் நாளே நான் லீனியர் படம் கிடையாது என அமேசான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏனோ தானோ என்று படத்தை அமேசான் ரிலீஸ் செய்து உள்ளதை அடுத்து அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva