செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (10:30 IST)

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல் வசதி சேர்க்கப்பட்டதை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால சலுகை விற்பனை தொடங்கும் நிலையில், அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

'ரூஃபுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உரையாடல் வசதி அமேசான் செயலியுடன் இணைக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கப் போகும் பொருள்கள் குறித்த விவரங்களை இந்த AI செயலியின் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், எந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்கலாம் என்பது போன்ற சிபாரிசுகளையும் இதில் அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் பொருளுடன் இன்னொரு நிறுவனத்தின் பொருளை ஒப்பிடும் வசதியும் இதில் உள்ளது. எழுத்துக்களால் அல்லது பேசுவதன் மூலமும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  


Edited by Siva