1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (13:33 IST)

ஆர்டர் செய்து கேன்சல் செய்த பொருள் 2 ஆண்டுகளுக்கு பின் டெலிவரி ஆன அதிசயம்..!

அமேசானில் பிரஷர் குக்கர் ஆர்டர் செய்து அதன் பின் ஆர்டரை கேன்சல் செய்த நிலையில் அந்த ஆர்டருக்கான பொருள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜெய் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் பிரஷர் குக்கர் ஆர்டர் செய்த நிலையில் அதன் பின் அவர் அந்த ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்று விட்டார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ஆர்டர் செய்து கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெற்ற பொருள் அவரது வீட்டுக்கு வந்துள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு அமேசான் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஆர்டர் செய்ததாகவும் அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆர்டர் செய்து கேன்சலான பொருளை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது மிகவும் சிறப்பான குக்கராக இருக்க வேண்டும் அதனால் தான் கேன்சல் செய்தபோதிலும் எனக்கு எந்த பிரஷர் குக்கரை அனுப்பி உள்ளார்கள் என்று அவர் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran