சனி, 14 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (14:26 IST)

அவதார் 3 ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஜேம்ஸ் கேமரூன்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

ஆனால் முதல் பாகம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.

இந்நிலையில் இப்போது அவதார் 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19 ஆம் தேதி அவதார் 3 ”அவதார் 3- நெருப்பும் சாம்பலும்” படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.