ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:06 IST)

டாட்டூவுக்கு அடிமை…உடலை மாற்றிக் கொள்ள இத்தனை லட்சமா? Mr Skull face ஓபன் டாக்

உலகில் உள்ள மக்கள் தம் முகம் கை, கால் உடம்பில் டாட்டூக்கள் குத்திக் கொள்வதை வாடிக்கையாகவும் ஃபேசனாகவும் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மிஸ்டர் ஸ்கல் ஃபேஸ் என்பவர் தனது முகத்தை மண்டை ஓடு போலவும்  நெற்றில் கொம்புகள் முளைத்தது போலவும்  கையில் தேள் இருப்பது போல டாட்டூகள் குத்தி அதற்கு அடிமையாகியுள்ளார்.

இதற்காக அவர் 13 வருடங்கள் செலவழித்துள்ளார். இதுகூட பரவாயில்லை தனது காது இரண்டையும் நீக்கிவிட்டார். இதற்காக அவரது நிறுவனம் அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டது. ஆனாலும் தனக்கு மன நிம்மதி வேண்டும் என்பதற்காக இப்படி செய்து வருவதாகவும் மற்றவர்களின் விமர்சனம் தன்னை முன்னேற்றத்தின்  பக்கம் கொண்டு செல்வதாகவும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

இதுவரை 5.8 லட்சம் செலவழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்