வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2017 (13:19 IST)

16 வயது சிறுமி உள்பட பல பெண்களை சீரழித்த பிரபல டிவி நடிகர்!

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் ரீதியாக பிரிட்டனை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவர் சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரிட்டனை சேர்ந்த 34 வயதான ப்ரூனோ லேங்லி என்பவர் ஐ டிவி என்னும் தனியார் தொலைக்காட்சியில் கோரோனேசன் ஸ்டீரீட் என்ற நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர். இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
 
ப்ரூனோ 29 வயது இருக்கும் போது 16 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி அவருக்கு ஒரு சிற்றின்ப காதல் குறித்த புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் அந்த சிறுமியுடன் புரூனோ உடலுறவு கொண்டுள்ளார். தொடர்ந்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்த போது தான் அவர் மோசமானவர் என்பது சிறுமிக்கு தெரியவந்தது.
 
இதனையடுத்து சிறுமி புரூனோவுடனான தொடர்பை முறித்துக்கொண்டார். ஆனால் ப்ரூனோ ஒரு வருடம் கழித்து அந்த சிறுமியை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் ப்ரூனோ வேறு பல பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
 
இதனையடுத்து புரூனோ மீது பெண்கள் புகார் அளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே புரூனோ அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் 16 வயது சிறுமியை பாலியல் பயன்பாட்டுக்கு பயன்படுத்திய குற்றத்திற்கு புரூனோவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு 12 மாதம் சமூக கட்டுப்பாடு தண்டனையும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
 
ஆனால் அவரது மன்னிப்பு யாருக்கும் உதவாது என பாதிக்கப்பட்ட சிறுமி கருத்துக்கூறியுள்ளார். இதனிடையே தனது தவறுக்கு வந்துவதாகவும், தனது செயலுக்கு வேதனைப்படுவதுடன் வெட்கி தலைகுனிவதாக ப்ரூனோ கூறியுள்ளார்.