ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (16:48 IST)

அமெரிக்காவில் ரயில் மோதி இந்தியர் பலி

அமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியா மாகாணத்தில் ரயில் மோதி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார். இச்சம்வத்தால் அவரது குடும்பத்தினர்  மற்றும் உறவினர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா எராவெள்ளி(44). இவர் அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கிருஷ்ணா எராவெள்ளி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
 
இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.