திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (10:06 IST)

நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி - 15 பேர் மாயம்

சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவால் மாயமான 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11.4 செ.மீ மழை பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிலியின் முக்கிய சுற்றுலா ஸ்தலமான வில்லா சாண்டா லூசியாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சேற்றில் சிக்கி 4 பெண்கள் மற்றும் சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் மாயமான 15 பேரை மீட்கும் நடவடிக்கையை மீட்புப்படை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை துரிதமாக மீட்கவேண்டும் என அந்நாட்டு அரசு,  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.