திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (20:44 IST)

பாகிஸ்தான் நாட்டில் 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்கொடுமை! அதிர்ச்சி தகவல்

abuse
பாகிஸ்தான் நாட்டில் 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வில் தகவல் வெளியாகிறது.

பாகிஸ்தான் நாட்டில் சபாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, இலங்கையைப் போல் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், சமீபத்தில் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில். அங்குள்ள சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு  நடத்தியுள்ள ஒரு கணக்கெடுப்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை  21,900 பெண்கள் வன்கொடுமை செய்யபட்டதாகவும், தற்போது நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்கொடுமை செய்யபப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கவுரவக் கொலைகள் அதிகரித்து வருவதாகவும்,கற்பழிப்பு வழக்குகுகளுக்கான தண்டனை விகிதம் 0.2சதவீதமே உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj