வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 8 அக்டோபர் 2022 (22:24 IST)

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட வாய்ப்பு

பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தக்வல் வெளியாவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில்தான்   அங்கு பொருளாதார  நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அவரது ஆட்சி நிர்வாகத்தின் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து, அவரது ஆட்சி மீத் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தோற்ற நிலையில்  எதிர்க்கட்சியின் ஆதரவில் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு  நிகழ்ச்சியில் பேசிய இம்ராங்கான்,  நீதிபதிகள், போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், தன் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு சட்டத்திற்கு புறம்பாகப் பணம் பெற்றதாகவும் புகார் எழுந்ததை அடுத்து,  அவர் வீட்டுக் காவல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj