வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (16:32 IST)

20 வருட பிளாஷ்பேக்: நடுரோட்டில் ஆசிரியரை அடித்து துவைத்த மாணவன்

சீனாவில் தன்னை அடித்த ஆசிரியரை மாணவன் 20 வருடங்கள் கழித்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாங் என்ற மாணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருசமயம் ஆங்கில வகுப்பின்போது கண் அசந்து தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆங்கில ஆசிரியர் சாங்கை  சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சாங் மிகவும் அவமானம் அடைந்துள்ளார். ஆனால் அப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து அந்த ஆசிரியரை நடுரோட்டில் பார்த்த சாங், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்து தொதித்தெழுந்தான். பின்னர் வேகமாக அவர் கிட்டே சென்று அவரை சரமாரியாக அடித்துவிட்டு சென்றான். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.