திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (08:24 IST)

குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றிய தாய்: சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் குழந்தையின் வாயில் ஆசிட்டை ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்தார். தினேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில் அவர் வழக்கமாக வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்தபிறகு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.
 
விசாரணையில் தினேஷின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் தான் தம் குழந்தையை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரியவந்தது.