திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 டிசம்பர் 2018 (16:24 IST)

2வது கணவருடன் இன்பச்சுற்றுலா: தீர்த்துக்கட்டிய முதல் புருசன்

உத்திரபிரதேசத்தில் 2வது மனைவியை முதல் கணவர் ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை நேர்த தர்மேந்திர பிரதாப் என்ற நபர் கடந்த் 2011 ஆம் ஆண்டு  ராக்கி ஸ்ரீவஸ்தவா என்பவரை  2-வதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர். பின்னர் 2016 ஆண்டு ராக்கி மனிஷ் என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
 
இந்நிலையில் ராக்கி சமீபத்தில் தனது இரண்டாவது கணவருடன் இன்பச் சுற்றுலா சென்றார். அப்போது அவர் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் தர்மேந்திர பிரதாப் மீது சந்தேகித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. முதல் கணவரை பிரிந்த பிறகும் ராக்கி அவரிடம் தொடர்பில் இருந்துள்ளார். சொத்து பிரச்சனைக்காக தர்மேந்திர பிரதாப் ராக்கியை மலை மீதிலிருந்து தள்ளி கொலை செய்துள்ளார். போலீஸார் பிரதாப்பிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.